Breaking Newsஇலங்கைஉலகம்

ரஷ்ய பிரஜை இலங்கையில் பலி

ரஷ்ய பிரஜை இலங்கையில் பலி

Shanu

Matale

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 65 வயதுடைய ரூக் கரிசன் என்பவர் மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற பொழுது கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக  கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

ரஷ்ய நாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட குறித்த நபர் சம்பவதினமான இன்று காலை பாசிக்குடா கடலில் நீராடிய போது கடல் மூழ்கி தத்தளித்துக் கொண்டு இருந்த போது அங்கு இருந்த கடற்படையினர் உடனடியாக செயற்பட்டு அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளதையடுத்து சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button