Shanu
Matale
பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக
தெரிவு ஒன்றியத்தின் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவு பிரதி இணைத் தலைவர்கள் நால்வர். பத்தாவது பாராளுமன்றத்தில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்ட திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இந்த ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்போது ஒன்றியத்தின் இணைத் தலைவராக அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேனவின் பெயரை, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜனக சேனாரத்ன முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் அதனை வழிமொழிந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார வழிமொழிந்தார்.