Shanu
Matale
64 வயதுடைய மகுல்பொத பிரதேசத்தைச் சேர்ந்த பன்சியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்கஹஎல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பன்சியகம பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (11) இரவு முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்சியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.