
Shanu
ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட பிரித்தானிய தம்பதி ஒன்று தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் வெளிவிவகார அலுவலகத்தின் எச்சரிக்கைகளை புறக்கணித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
போர் சூழல் மிகுந்த ஈரான் நாட்டில் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொள்ள அந்த தம்பதி திட்டமிட்டிருந்துள்ளது. பிரித்தானியர்களான கிரெய்க் மற்றும் லிண்ட்சே ஃபோர்மேன் தம்பதியே ஈரானில் தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்
கடந்த ஆண்டு டிசம்பர் 30 ன் திகதி ஆர்மீனியாவிலிருந்து ஈரானுக்குள் நுழைந்துள்ளனர். பயணத்தின் இடையே தப்ரிஸ், தெஹ்ரான் மற்றும் இஸ்ஃபஹான் பகுதியில் உள்ள ஹொட்டல்களில் தங்கியுள்ளனர்.
ஆனால் கெர்மானில் உள்ள அவர்களின் அடுத்த ஹொட்டலை அடையவே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஈரானுக்கு எந்தப் பயணமும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துகிறது, ஈரானில் பயணிகள் பிரித்தானிய கடவுச்சீட்டு அல்லது பிரித்தானியாவுடன் தொடர்பு வைத்திருந்தால் கூட கைது செய்யப்படலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
இன்று, அந்தத் தம்பதியினரின் குடும்பத்தினர் உதவி கோரி ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளனர். அவர்களின் கைது குறிப்பிடத்தக்க கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும், அவர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.