
Shanu
அமெரிக்காவின் தென் கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்த கடும் மழை மற்றும் வௌ்ளம் காரணமாக சுமார் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.அதேவேளை கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர், ‘தனது மாநிலத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதோடு சுமார் 1,000 பேர் வௌ்ளத்தில் சிக்கியிருந்தனர்.
அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்று நேற்று முன்தினம் குறிப்பிட்டுள்ளார்.கென்டக்கி, ஜோர்ஜியா, அலபாமா, மிசிசிப்பி, டென்னசி, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா மற்றும் வட கரோலினா ஆகிய மாநிலங்களுக்கு கடந்த வார இறுதியில் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தன.
அந்த மாநிலங்கள் அனைத்தும் கடந்த செப்டம்பரில் ஹெலீன் சூறாவளியால் பேரழிவு சேதத்தை சந்தித்தமை தெரிந்ததே.
இந்த கடும் மழை வௌ்ளம் காரணமாக இலட்சக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கென்டக்கியின் சில பகுதிகளில் 6 அங்குலம் வரை மழை பெய்ததாக தேசிய வானிலை சேவை புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.