Homeஇந்தியாசினிமா

ரீ-ரிலீஸ் ரஜினி முருகன் படம்

ரீ-ரிலீஸ் ரஜினி முருகன் படம்

shanu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து, சிவகார்த்திகேயனின் கெரியர் பெஸ்ட் வசூல் திரைப்படமாக மாறியுள்ளது.

ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் எஸ்கே 23 மற்றும் SK25 படமான ‘பராசக்தி’ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.சூப்பர் ஹிட் படம்சமீப காலமாக பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்கள் ஒருபுறம் ரீ-ரிலீஸ் ஆகி வருகிறது.

அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் மார்ச் மாதம் ரீ ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த சமயத்தில் இப்படம் செய்துள்ள மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி, இப்படம் ரூ. 55 கோடி வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button