
Shanu
பொதுத்துறை ஆட்சேர்ப்பு செயல்முறையை மதிப்பாய்வு செய்வதற்கும் பணியாளர் மேலாண்மைக்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக பிரதமரின் செயலாளரின் கீழ் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு அதன் இரண்டாவது அறிக்கையில் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.11 அமைச்சுக்கள் மற்றும் 05 மாகாண சபைகளின் கீழ் உள்ள நிறுவனங்களில் தற்போதுள்ள 4,987 காலியிடங்களிலிருந்து 2,003 பேரை ஆட்சேர்ப்பு செய்ய அறிக்கை பரிந்துரைத்துள்ளது. அதன்படி, அந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்காகப் பிரதமர் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்தது.