Homeஇலங்கை

பாடசாலை மாணவர் ஒருவர் இரயிலில் மோதி மரணம்

பாடசாலை மாணவர் ஒருவர்இரயிலில் மோதி மரணம்

Shanu

அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொடை கரித்த கந்த வாயிலுக்கும் கந்தேகொட ரயில் நிலையத்திற்கும் இடையில் 52.5 மைல் கல் அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் உயிரிழந்தவர் எல்பிட்டிய, எல்ல வீதியில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஆவார்.

மாணவன் ரயில் தண்டவாளத்தில் தனியாக பயணித்துள்ளதோடு, காதுகளில் Handsfree பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரயிலில் ஒலி எழுப்பியும் சத்தம் கேட்கவில்லை என்றும், பின்னால் வந்த ரயிலில் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த மாணவன் சாதாரண தர பரீட்சைக்கு இம்முறை தோற்றவிருந்தவர் என தெரியவந்துள்ளது.

பாடசாலை மாணவர்கள் ரயில் தண்டவாளங்களில் தங்கியிருப்பது குறித்து கடந்த வாரம் கிடைத்த தகவலின் அடிப்படையில், எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும் அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button