
Shanu
ஒரே மாதிரியான பதிவு இலக்கங்களைக் கொண்ட இரண்டு கார்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வென்னப்புவ பொலிஸ் பிரிவின் வயிக்கால பகுதியில் ஒருவருக்குச் சொந்தமான கார் ஒன்றின் பதிவுப் புத்தகம் மற்றும் வாகன மாற்று விண்ணப்பப் படிவம் திருடப்பட்டு, போலி பதிவுப் புத்தகம் மாற்றப்பட்டுள்ளதாக நேற்று (05) வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, நேற்றிரவு (05) வென்னப்புவ பொலிஸ் பிரிவின் வய்க்கால பகுதியில் உள்ள வென்னப்புவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு, மேற்கண்ட காரின் அதே நிறத்தில், ஒரே மாதிரியான காரின் பதிவு இலக்கத்தைக் கொண்ட ஒரு காரை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் இரண்டு கார்களையும் பொலிஸார் பொறுப்பேற்றனர்.
மேலதிக விசாரணைக்காக இரண்டு வாகனங்கள் சிலாபம் பிரிவு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.