இலங்கை

கடலில் மூழ்கி 20 வயது இளைஞன் பலி

கடலில் மூழ்கி 20 வயது இளைஞன் பலி

Shanu

மாதகல் கடலில் நேற்று (21) இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இனுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவொன்று நேற்று (21)மாதகல் கடற்கரையில் உணவு சமைத்து உண்பதற்காக நேற்று (21) காலை 11 மணியளவில் சென்று, பிற்பகல் 3.15 மணியளவில் கடலில் குளிக்கச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், கோயில் வாசல், காங்கேசன்துறை வீதி, இனுவில் பகுதியைச் சேர்ந்த பிரேமானந்த் சாருஜன் எனும் 20 வயதான இளைஞர், கடலில் குளிக்க முயன்றபோது கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டார்.

பின்னர், பொதுமக்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மாலை 5.30 மணியளவில் அவரது உடல் மீட்கப்பட்டது.குறித்த இளைஞனின் உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்படவுள்ள நிலையில், இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button