பிக் பாஸ் 7 வீட்டில் இருப்பவர்களுக்கு இன்று புது டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. டாஸ்கின் பெயர் சுமை தாங்கி. அது குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
சுமை தாங்கி டாஸ்க்கில் என்ன செய்ய வேண்டும் என பூர்ணிமா விவரிப்பதுடன் ப்ரொமோ வீடியோ துவங்கியிருக்கிறது. இந்த டாஸ்க்கில் தோல்வி அடைந்தால் பெரிய பெட்ரூம் மூடப்படும் என பூர்ணிமா கூறியதை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
ஒவ்வொரு போட்டியாளரும் டோகளில் மட்டுமே நின்று கொடுக்கப்பட்டுள்ள செங்கலை தலையால் பேலனஸ்ஸ் செய்ய வேண்டும் என பூர்ணிமா சொல்லி முடிப்பதற்குள் நிக்சனுக்கு பேலன்ஸ் போய்விட்டது. இதையடுத்து சார் என்னை எலிமினேட் பண்ணிடுங்க சார்னு கோபமாக கிளம்பினார் கூல் சுரேஷ்.
நிக்சனை அடுத்து பூர்ணிமாவுக்கு பேலன்ஸ் போய் செங்கல் கீழே விழுந்துவிட்டது. இதையடுத்து பெரிய பெட்ரூமை பூட்டிவிட்டார் பிக் பாஸ். யாரையுமே உள்ளே விட வேண்டாம் என கூல் சுரேஷ் கமெண்ட் அடிப்பதுடன் ப்ரொமோ வீடியோ முடிந்துவிட்டது.
கூல் சுரேஷை எப்படியும் இந்த வாரம் வெளியேற்ற மாட்டார் பிக் பாஸ் என்பது அவருக்கே தெரியும். அதனால் தான் என்னை எலிமினேட் பண்ணுங்க என்று கூறியிருக்கிறார் போன்று. இந்த வாரம் எவிக்ஷனுக்கான நாமினேஷனில் இருக்கும் பூர்ணிமாவை வெளியேற்றுவதில் தான் பார்வையாளர்கள் குறியாக உள்ளனர்.