கனடாவில் வீட்டு வாடகைத் தொகை தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
Rentals.ca and Urbanation ஆகிய நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த ஒக்ரோபர் மாதம் மாதாந்த சராசரி வாடகைத் தொகை 2178 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இது ஓராண்டு காலப் பகுதிக்குள் 9.9 வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆறு மாத காலமாகவே நாட்டில் வாடகைத் தொகை அதிகரிப்பு தொடர்ச்சியாக உயர்வடைந்துள்ளது.
ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகை 1906 டொலர்கள் எனவும் இது 2022ம் ஆண்டை விடவும் 14 வீத அதிகரிப்பு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவில் வீட்டு வாடகை மிகவும் அதிகமாக அறவீடு செய்யப்படும் நகரமாக வான்கூவார் நகரம் தொடர்ந்தும் முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.