சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு வருடமும் வானொலி மற்றும் தொலைக்காட்சி கட்டணம் செலுத்த வேண்டிய நடைமுறையுள்ள நிலையில் அரிதான சந்தர்ப்பங்களில் வானொலி மற்றும் தொலைக்காட்சி சட்டத்தின் மீறல்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் 5,000 பிராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படலாம் கூறப்படுகிறது.
குறித்த கட்டணப் பணம் செராஃப் என்ற நிறுவனத்தால் சேகரிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக 2019 மற்றும் 2022 க்கு இடையில் மொத்தம் 1,400 க்கும் மேற்பட்ட குடும்பங்களை ஆய்வு செய்ததாக சுவிட்சர்லாந்து பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.
மேலும், 174 வழக்குகளில், ஆய்வு செய்யப்பட்ட வீடுகளில் மேற்படி சாதனங்கள் காணப்பட்டதால் அபராத அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது