குளிர் காலத்தில் பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் ப்ளூ காய்ச்சல் பரவுவதுண்டு. ஆனால், கோவிட் காலகட்டத்துக்குப் பிறகு, ப்ளூவைவிட கோவிட் அதிகமாகிவிட்டது.
சுவிட்சர்லாந்து பெருமளவில் கோவிட் தொற்றை எதிர்கொண்டுவருகிறது. அதே நேரத்தில், ப்ளூ காய்ச்சலும் பரவிவருகிறது.
சொல்லப்போனால், ப்ளூ காய்ச்சலைவிட கோவிட் தொற்று அதிகம் காணப்படுவதாக சுவிஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
கோடையில் அதிகரிக்கத் துவங்கிய கோவிட், கடந்த மாதத்தில் அதிக அளவில் பரவியுள்ளது. சுவாசம் தொடர்பான பிரச்சினைகளுக்காக மருத்துவர்களை நாடுவோர் எண்ணிக்கை சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவருகிறது.
இன்னொரு விடயம், ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கையைவிட கோவிடால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டாலும், ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவருவதாகவும் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.