சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக இரண்டு விமான நிலையங்களில் தரையிறக்க முடியாமல் போன விமானம் ஒன்றை அவசரமாக தரையிறக்கும் நிலை உருவானது.
சுவிட்சர்லாந்தின் நைஸ் நகரிலிருந்து ஜெனீவாவுக்குச் சென்ற விமானமொன்றை ஜெனீவாவில் தரையிறக்க முயன்றபோது, பலத்த காற்று வீசியமையினால் தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக குறித்த விமானம் திரும்பி பேஸல் விமான நிலையத்துக்குச் சென்ற போது அங்கும் பலத்த காற்று வீசியதால் விமானத்தால் தரையிறங்க முடியமால் போயுள்ளது.
இந்நிலையில் 18 நிமிடங்கள் மட்டுமே பயணிக்க விமானத்தில் எரிபொருள் உள்ளது என்னும் சிக்கலான சூழல் உருவானமையினால் வேறு வழியில்லாமல் அவசரமாக குறித்த விமானம் சூரிச் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.