இந்தியா
Trending

‘உச்சநீதிமன்றம் குட்டு வைத்ததும் அவசரமாக செயல்படுகிறார்’ – ஆளுநர் ஆர் என் ரவியை சரமாரியாக சாடிய ஸ்டாலின்…!!

தமிழ்நாடு

தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை கடுமையாக விமர்சித்தார். சில இடையூறுகளால் இந்த சிறப்புக் கூட்டம் நடப்பதாக தெரிவித்தார். இடையூறுகளை தடுக்கும் வகையில் தமிழகத்தின் நலனுக்காக அவசரம் கருதி அவசியம் கருதி இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. நிதி நெருக்கடி மற்றும் மத்திய அரசின் நெருக்கடி இல்லாவிட்டால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.

தமிழக அரசை முடக்கும் வகையில் ஆளுந மத்திய அரசின் இந்த போக்கு தொடர்ந்தால் ஜனநாயகம் பாதிக்கப்படும். சமூக நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் மத்திய அரசுக்கே முன்னோடியாக உள்ளது. பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் குடைச்சல் கொடுத்து வருகிறார்கள். ஆளுநர் என்ற உயந்த பதவியின் மூலம் அரசியல் செய்ய நினைக்கின்றனர். ஆளுநர் சட்டமன்றத்தை அவதிமதிக்கிறார், ஜனநாயகத்தை அவமதிக்கிறார்.

ஆளுநர் மத்திய அரசுடனான நெருக்கத்தை பயன்படுத்தி தமிழகத்துக்கு தேவையான நிதியை பெற்று தரலாம். தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் ஒரு பாலமாக இருந்து திட்டங்களை பெற்று தரலாம். ஆனால் தனிப்பட்ட விருப்பு வெருப்புகள் அடிப்படையில் மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளார் ஆளுநர். ஆளுநரின் செயல் சட்ட விரோதம், ஜனநாயக விரோதம் விரோதம் மற்றும் மனசாட்சி
விரோதம்.

ஆளுநருக்கு சரியான அறிவுரைகளை வழங்க குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினோம். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் கடமை. மசோதாக்களில் ஏதாவது சந்தேகம் இருந்தால் ஆளுநர் அரசிடம் கேட்கலாம். ஆளுநர் கேட்ட சந்தேகங்களுக்கு இதுவரை விளக்கம் அளிக்காமல் இருந்ததில்லை. ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி, அகற்றப்பட வேண்டிய பதவி என்றாலும் இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்திற்கு அடங்கியிருக்க வேண்டும்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதால்தான் உச்ச நீதிமன்ற வழக்கு தொடர்ந்துள்ளோம். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவசர அவசரமாக மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார். உச்சநீதிமன்றம் குட்டு வைத்ததும் அவசரமாக மசோதாக்களை திருப்பி அனுப்பி சிலவற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். தினமும் யாரையாவது உட்கார வைத்து விதண்டாவாதம் பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர் என் ரவியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button