பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு வைல்ட் கார்டு போட்டியாளராக 28வது நாளில் வீட்டிற்குள் நுழைந்தார் தினேஷ். வீட்டிற்கு வந்த முதல் நாளே வீட்டில் உள்ள அனைவரையும் ஆட வைத்து விட்டார். முகத்திற்கு நேராக அவரவர் செய்திருக்கும் விஷயங்களை பட்டெனக்கூறி ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்து விட்டார்.
தினேஷ் வீட்டுக்குள் இருந்த முதல் வாரத்தில் எக்கச்சக்கமான எதிர்ப்புகளை பெற்றார். அவர் இரண்டாவது வாரத்திலேயே கேப்டன் ஆனார். தினேஷின் முதல் கேப்டன்ஸி மிகவும் நியாயமாகவும் நேர்மையாகவும் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு என்னென்ன தேவை என்பதை புரிந்து செயல்பட்டார். அதன் விளைவாக அடுத்த வார கேப்டன்ஸிக்கும் அவர் நாமினிட் செய்யப்பட்டார்.
கேப்டன்ஸி டாஸ்க் என வந்துவிட்டால் தினேஷை மிஞ்ச ஆளே இல்லை எனும் கருத்துக்கள் சமூகவலைதளத்தில் பதவி வருகிறது. இதற்கு முன் நடந்த கேப்டன்ஸி டாஸ்கில் அவரிடம் போட்டியிட்ட இருவர் போட்டிக்கு தயாராவதற்கு முன்பே போட்டியை முடித்து கேப்டனாக பதவியை பெற்றார். இந்த வார கேப்டன்ஸி டாஸ்கில் தினேஷுடன் நிக்சன் மற்றும் கூல் சுரேஷ் ஆகியோர் மோதினார்கள். இந்த முறையும் தினேஷ் போட்டியை வென்று கேப்டனாக ஆனார்.
வீட்டில் குறைவான சுவாரசியத்தோடு இருக்கும் இருவரை நாமினேட் செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு வந்தது. அந்த வகையில் வீட்டில் இருக்கும் பெரும்பாலானோர் விசித்ரா மற்றும் அர்ச்சனாவை தேர்ந்தெடுத்திருந்தார்கள். ஆனால் தங்களை விட சுவாரஸ்யம் குறைவாக இருக்கும் போட்டியாளர்கள் இருக்கும்போது நாங்கள் ஏன் ஜெயிலுக்கு செல்ல வேண்டும் என விதியை மீறி ஜெயிலுக்கு செல்லாமல் அடம் பிடித்துக் கொண்டிருந்தார்கள் விசித்ரா மற்றும் அர்ச்சனா.
விசித்ரா, அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகியோர் நல்ல கூட்டணியாக மக்களுக்கு தெரிகிறார்கள். வீட்டில் இருப்பவர்களும் இந்த மூன்று பேரும் கேங்காக சேர்ந்து விளையாடுவதாக பேசி இருக்கிறார்கள். இந்த மூவருக்கும் ஓரளவு ஒரே மாதிரியான எண்ணங்கள் தான் இருக்கிறது அந்த வகையில் விசித்ரா மற்றும் அர்ச்சனாவுக்கு எந்தவித சலுகையும் கொடுக்காமல் வீட்டின் கேப்டனாக நியாயமாக நடந்து கொண்டார் தினேஷ். நண்பர்களாக இருந்த போதிலும் அவர்களுக்கு எந்தவித சலுகையும் இல்லாமல் விதியை மீறியது தவறு என சுட்டிக்காட்டினார் தினேஷ். அவரின் இந்த செயல் மக்களை கவர்ந்தது.
ஆனால் இதற்கு முன் இருந்தால் கேப்டன்கள் அவர்களின் நண்பர்களுக்காக பல சலுகைகளை செய்து இருப்பதாகவும் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் விதியை மீறிய விசித்ரா மற்றும் அர்ச்சனாவுக்கு என்ன செய்யலாம் என தினேஷ் கேட்டபோது, விஷ்ணு சாப்பாடு தர வேண்டாம் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் எனக் கூறினார். ஆனால் தினேஷ் சாப்பாடு கொடுக்காமல் இருப்பது தவறு, கொடுப்போம், சாப்பிடுவதும் வேண்டாம் என்பதும் அவர்களது விருப்பம் என உணவை கொடுத்தார் தினேஷ்.
விசித்ரா மற்றும் அர்ச்சனாவை எப்படியோ மல்லுக்கட்டி ஜெயிலுக்கு அனுப்பி வைத்தார் தினேஷ். தினேஷுக்கு ஏற்கனவே வெளியில் எக்கச்சக்கமான வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் கேப்டனாக சிறந்த வேலையை செய்து வரும் தினேஷ் மக்களின் ஆதரவை பெற்று வருகிறார். நாளுக்கு நாள் தினேஷ் மீது இருக்கும் மரியாதை அதிகமாவதாகவும் ரசிகர்கள் அவரை பாராட்டி பல பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள் தினேஷ் ரசிகர்கள்.