கனடா
Trending

சர்ச்சைகளுக்கு இடையே மீண்டும் பிரதமரான பெட்ரோ சான்செஸ் – ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து

ஸ்பெயினின் பிரதமராக மீண்டும் தெரிவான பெட்ரோ சான்செஸுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினின் பிரதமர்
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கடந்த சூன் மாதம் தேர்தல் நடந்தது. இதில் மத்திய வலது பாப்புலர் கட்சி அதிக வாக்குகளை பெற்றது.

ஆனால், 3வது இடத்தைப் பிடித்த தீவிர வலதுசாரி வோக்ஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததால், அரசு அமைப்பதற்கான ஆதரவை பெற முடியவில்லை.

இந்த நிலையில் தான் பொறுப்பு பிரதமராக இருந்த பெட்ரோ சான்செஸின் கட்சி 121 இடங்களைப் பிடித்தது. இதன்மூலம் இரண்டாவது இடத்தைப் பிடித்தாலும், ஆட்சி அமைக்க போதுமான ஆதரவை பெற வேண்டிய சூழல் நிலவியது.

இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் விவாதம் நடந்தது. அதன் பின்னர் நடந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பில், 350 உறுப்பினர்கள் கொண்ட கீழ் அவையில் பெட்ரோவுக்கு ஆதரவாக 179 வாக்குகள் கிடைத்தது.

இதன்மூலம், பிரிவினைவாதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்த சர்ச்சைகளுக்கு இடையே ஸ்பெயினின் பிரதமராக பெட்ரோ சான்செஸ் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஸ்பெயினின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோ சான்செஸை கானடா அரசாங்கத்தின் சார்பாக நான் வாழ்த்துகிறேன்.

கனடாவும், ஸ்பெயினும் நெருங்கிய பார்ட்னர்கள் மற்றும் நண்பர்கள், நமது மக்களிடையே வலுவான ஒத்துழைப்பு மற்றும் அன்பான உறவுகளின் வரலாற்றைக் கொண்டுள்ளது.

பிரதமர் சான்செஸுடன் பொதுவான முன்னுரிமைகளின் வரம்பில் தொடர்ந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன் – லட்சிய காலநிலை நடவடிக்கை எடுப்பதில் இருந்து பாலின சமத்துவத்தை முன்னேற்றுவது வரை.

ஒன்றாக, கனடா-ஐரோப்பிய யூனியன விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) மூலம் நமது வலுவான பொருளாதார உறவுகளை தொடர்ந்து கட்டியெழுப்புவோம், இது அட்லாண்டிக்கின் இருபுறமும் புதிய வாய்ப்புகளையும் நல்ல நடுத்தர வர்க்க வேலைகளையும் உருவாக்குகிறது’ என தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button