இந்தியா
Trending

அடுத்தவர்களுக்கு சேவை செய்யவே இந்த வாழ்வு – தமிழக ஆளுநர்…!!

தமிழ்நாடு

பகவான் மகாவீர் அறக்கட்டளை என்ற தனியார் அமைப்பு சார்பில் 26வது மகாவீர் விருதுகள் வழங்கும் விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. மகாவீர் அறக்கட்டளை சார்பில் டெல்லியை தலைமையிடமாக கொண்ட தியான் அறக்கட்டளை, பழங்குடி சமூகத்தின் நண்பர்கள் உள்ளிட்ட நான்கு அறக்கட்டளைகளுக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் விருதுகளை ஆளுநர் வழங்கினார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.ரவி, பகவான் மகாவீர் அறக்கட்டளைக்கும், விருது பெற்றவர்களுக்கும் பாராட்டுக்கள். விலங்குகளுக்கு உணவளிப்பது என்பது நல்ல விஷயம். மேலும் பராமரிப்பு இன்றி கைவிடப்பட்ட கால்நடைகளை மீட்டு அவற்றுக்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட சேவைகள் சிறந்தவை.

நீங்கள் இந்த சமூகத்துக்கு நல்ல சேவையை வழங்கி வருகிறீர்கள். பிற மாநிலங்களை ஒப்பிடும் போது.. தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பானது.. பாராட்டி பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி இந்த சமூகத்தில் உதவுவது என்பது நம் கலாச்சாரத்திலேயே உள்ளது. மக்களுக்கு தேவையான முழுமையான உதவிகளை அரசு மட்டுமே வழங்க இயலாது. சனாதான தியாந்தாவில் அனைவரும் ஒன்று. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்.

நாம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வள்ளலாரின் 200-வது பிறந்த நாளை கொண்டாடினோம். “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என வள்ளலார் கூறிய வரிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இன்றைய உலகம் பல்வேறு காரணங்களால் பிரிந்து கிடக்கிறது. இந்த உலகில் நாம் அனைவரும் ஒன்று என்பதை வெளிக்காட்டும் வகையில் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாடு வெளிக்காட்டியது. வசுதேவ குடும்பம் , உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற பெயரில் நடைபெற்றது. இதில் மனிதர்கள் மட்டும் இன்றி விலங்குகள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் அடங்கும். இந்த வாழ்வு அடுத்தவர்களுக்கு சேவை செய்யவே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button