எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் இலங்கை பாடசாலை மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (27) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள சுமார் 12 லட்சம் பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை வழங்க உள்ளதாகவும், முன்னோடி திட்டமாக முதலில் 3 லட்சம் பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை வழங்கி இந்த திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமாக இது செயல்படுத்தப்பட உள்ளதாகவும், கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.