தமிழ்நாடு
சென்னை தரமணியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜெயக்குமார், 4000 கோடி செலவு செய்து வடிகால் அமைத்துள்ளோம். இனி எங்கும் தண்ணீர் நிற்காது என்றார்கள். இன்றைக்கு பாருங்கள். சென்னை முழுவதும் அனைத்து இடங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. 4000 கோடியை முறையாக பயன்படுத்தி இருந்தால் இப்படி தண்ணீர் தேங்கி இருக்காதே என்றார்.
மேலும், பாஜக தலைவர் அண்ணாமலை, இத்தனை ஆண்டு காலமாக ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் மழைநீர் வடிகால் பணிகளை சரிசெய்யவில்லை என விமர்சித்தது பற்றி பேசிய ஜெயக்குமார், “இன்ஸ்டால்மென்டில் நடைபயணம் செல்லும் அண்ணாமலைக்கு தமிழ்நாட்டில் என்ன நடந்தது, நடக்கிறது என்பதே தெரியாது.
கடந்த கால ஆட்சி குறித்து அவர் குறை சொல்லக் கூடாது. காமாலை வந்தவர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல, அண்ணாமலை பார்வையில்தான் பிரச்சனை உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.