இலங்கை
Trending

சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரு விமானங்கள்..!!

இலங்கைக்கு சீன அரசாங்கம் மூலம் இரண்டு செயற்திறன் மிக்க விமானங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அதிநவீன Harbin Y-12-IV ரக இரு விமானங்களே நேற்று (05) இரத்மலானை விமானப்படை தளத்தில் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு விமானமும் 15 பேர் பயணிக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன, பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா, இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இலங்கை அரசாங்கம் மற்றும் சீன தேசிய வானூர்தி தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கூட்டுத்தாபனத்தின் சார்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு இடையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button