ஒரு மாத ஊதியத்தை புயல் நிவாரண நிதியாக வழங்கிய முதல்வர் ஸ்டாலின் – எம்எல்ஏ, எம்பிக்களுக்கும் கோரிக்கை…!!
தமிழ்நாடு
4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை.
மழை நின்று 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் வேளச்சேரி போன்ற புறநகர் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியவில்லை. மீட்பு பணிகள் இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஒருமாத ஊதியத்தை நிவாரணமாக வழங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு என்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குகின்றேன். அனைத்து சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.