இலங்கையில் எதிர்வரும் 2024-ம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தேர்தல்கள் புதிய அரசியலமைப்பை திருத்துவது அல்லது உருவாக்குவது பற்றி ஆராய உதவும் என ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (07) ஜனாதிபதி ரணில் சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.
அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய இலங்கையைப் பற்றிய “இமயமலைப் பிரகடனம்” இதன்போது ஜனாதிபதி ரணலிடம் கையளிக்கப்பட்டது.
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 06 முக்கிய விடயங்களை “இமயமலைப் பிரகடனம்” உள்ளடக்கியுள்ளது.