தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து குணசத்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் மதுரை மோகன். மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு குடிப்பெயர்ந்தார். தொடர்ந்து பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களிலும் தந்தை, தாத்தா போன்ற கதாபாத்திரங்களும் நடித்து வந்தவர் மதுரை மோகன்.
தொடர்ந்து பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் 2014 வெளியான முண்டாசுப்பட்டி திரைப்படம் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. முண்டாசுப்பட்டி படத்தை தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு பெற்று மதுரை மோகன் அவர்கள் சமீபத்தில் வீரன் என்ற படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
நடிகர் மதுரை மோகன் கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிக்கு உள்ளாகி வந்தார். அதனால் படங்களில் நடிக்காமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை மதுரை மோகன் காலமானார். மதுரை மோகனின் இறப்புக்கு திரைப் பிரபலங்கள் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.
நடிகர் மதுரை மோகனின் மறைவுக்கு முண்டாசுப்பட்டி படத்தில் நடித்த நடிகர் காளி வெங்கட் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவில், ‘ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல் நலக் குறைவாக காலமானார். ஆழ்ந்த இரங்கல் வருத்தமும். ஏறத்தாழ நாற்பது ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை முண்டாசுப்பட்டி படத்தின் மூலம் வாய்ப்பளித்த இயக்குனர் ராம்குமார் அவர்களுக்கும், வீரன் பட இயக்குனர் சரவணன் அவர்களுக்கும் மற்றும் ஐயாவுக்கு வாய்ப்பு அளித்த அனைத்து இயக்குனர்களையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன் என பதிவிட்டு இருக்கிறார் வெங்கட்.
மறைந்த நடிகர் மதுரை மோகனுக்கு திரை பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மூத்த நடிகரின் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.