இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் போலி சுங்கச்சவாடி அமைத்து கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட போலி சுங்கச்சவாடி கடந்த ஒன்றரை ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்துள்ளதுடன், அரசை ஏமாற்றிச் செயல்பட்ட இந்த சுங்கச் சாவடி பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாயைக் கொள்ளையடித்துள்ளது.
சுங்கச்சவாடியில் வசூல் செய்யும் பணத்தை விட 50 சதவீதம் குறைவாக வசூலித்துள்ளனர். இதனால் வாகனம் சாரதிகள், கனரக வாகன சாரதிகள், இதுகுறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை.
தங்களுக்கு 50 சதவீதம் லாபம் கிடைப்பதால் அந்த வழியாக செல்ல ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரியவர, அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தபோது போலி சுங்கச்சாவடி செயல்பட்டது தெரியவந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் பலர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.