இந்தியா
Trending

2026ல் நான்தான் முதல்வர் – நம்பிக்கை தெரிவித்த சரத்குமார்…!!

தமிழ்நாடு

நெல்லையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் நடிகரும் அந்த கட்சியின் தலைவருமான சரத்குமார் பேசுகையில் அரசியலில் இருந்துதான் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்கிற அவசியம் எனக்கில்லை.

அரசியலில் நான் ஈடுபடுவதால் என்னை வீட்டில் தடுப்பவர்கள் யாரும் இல்லை. கடந்த 56 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆண்ட திராவிட கட்சிகள் சென்னையில் நீர் வழித்தடங்களை சரியாக செயல்படுத்தவில்லை. இலவசங்கள் வழங்குவதை தவிர்த்துவிட்டு அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கியிருந்தால் இந்த நிலை சென்னைக்கு ஏற்பட்டிருக்காது.

ஜனநாயகம் எல்லாம் மாறிவிட்டது. அதற்கு பதில் பணநாயகம் வந்துவிட்டது. பணத்தால் அரசு நடத்தும் நிலை என்று மாறுகிறதோ அன்றுதான் ஜனநாயகம் மலரும். உலகளவில் இந்தியர்களின் மதிப்பு உயர்ந்துள்ளதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடிதான். பிரதமர் மோடியால் இந்தியாவிற்கே பெருமை.

2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்று தமிழக முதல்வராக நான் பதவியேற்பேன். திராவிட இயக்கங்களின் ஆட்சி தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர்களை விரட்டி விட்டு வட இந்தியர்களை வைத்து வாக்களித்து அவர்களே வெற்றியும் பெற்றுவிடுவார்கள்.

இலவசங்களை தவிர்ப்பதுதான் பொருளாதார வளர்ச்சிக்கு அடையாளம். சென்னை மக்களுக்கு அரசு நிவாரணம் நிரந்தர தீர்வாக இருக்காது. அண்மையில் எனது மாமியார் கீழே விழுந்துவிட்டார், அவரை பார்த்து நலம் விசாரிக்க சென்றேன். அப்போது அவர் “உன்னை எப்போது முதல்வராக பார்க்க போகிறேன்” என கேட்கிறார். அவருக்கு 85 வயதாகிவிட்டது. வரும் 2026 ஆம் ஆண்டு நீங்கள்தான் முதல்வர் என என் மனைவியும் சொல்லிவிட்டார்.

எனது மனசு சுத்தம். அதிகமாக உழைப்பவன். சரத்குமார் சொல்லிவிட்டார் நாளை அமைச்சர் ஆகிவிடுவார் என நினைக்காமல் ஆக்கிவிடுவோம் என நினையுங்கள். அதற்காக உழையுங்கள். மன தைரியத்துடன் முன்னேறுங்கள் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button