இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் குழுவை ரத்து செய்ய தற்போதைய விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தீர்மானித்துள்ளார்.
இடைக்கால குழுவை நியமிக்கும் தீர்மானத்தை ரத்து செய்யும் வர்த்தமானியில் கையொப்பமிட்டதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஐசிசியினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடையை நீக்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் ஹரின் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த டுவிட்டர் பதிவில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐசிசியின் அவதானிப்புகளுக்கான கணக்காய்வு அறிக்கை தொடர்பில் எழுத்து மூலம் தங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.