தைவானைச் சேர்ந்தவர் சியா யூ என்ற 20 வயதான இளம் பெண் கடந்த வாரம் தைனான் நகரில் உள்ள மருத்துவமனையில், காய்ச்சல் மற்றும் முதுகு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்த பெண்ணின் சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
சிடி ஸ்கேனில் 5 மி.மீ. முதல் 2 செ.மீ. அளவிலான கற்கள் இருப்பதும், வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, சியா யூவின் சிறுநீரகத்தில் இருந்து பன் போன்ற வடிவத்திலான சுமார் 300 கற்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
தொடர்ந்து சில நாட்கள் ஓய்வுக்கு பின், சியா யூ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், சியா யூ, தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து, அதிகம் பபிள் டீ (Bubble Tea) குடித்ததே சிறுநீரகத்தில் கற்கள் உருவானதற்கான காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.