தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் – மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஆய்வு…!!
தமிழ்நாடு
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இன்று மத்திய குழுவினர் ஆய்வு செய்வதன் காரணமாக, நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு முதலமைச்சருக்கு விளக்கம் அளித்தனர்.