நான் என்ன ஊர் சுத்தி பார்க்கவா வந்திருக்கேன்? – எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த உதயநிதி…!!
தமிழ்நாடு
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாக மழைபெய்துள்ளது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் வந்துவிட்டது. தூத்துக்குடியில் பாயும் தாமிரபரணி அதன் அதிகமான நீர் மட்டத்தை எட்டியதை அடுத்து பாதுகாப்பு காரணமாகஅங்கிருந்து 50 ஆயிரம் கனஅடி முதல் 1 லட்சம் கன அடி வரை நீர் வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி நேற்று முன் தினம் முதல் நெல்லையில் மீட்பு பணிகளை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து இன்றைய தினம் அவர் தூத்துக்குடி வருகை தந்துள்ளார். அவர் முட்டிக்கு மேல் இருக்கும் நீரில் நடந்து சென்று ஆய்வு நடத்தி மீட்பு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்.
இந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்துள்ள முத்தாலம்மன் காலனி, ஸ்டேட் பேங்க் காலனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களை மீட்கின்ற பணிகளை முடுக்கிவிட்டார். இந்த நிலையில் அவர் படகில் சென்றும் வெள்ளம் பாதித்த பணிகளை ஆய்வு செய்திருந்தார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் எடப்பாடி பழனிசாமி வெள்ள மீட்பு பணிகள் சரியாக செய்யப்படவில்லை என கூறுகிறாரே என்ற கேள்விக்கு உதயநிதி கொந்தளித்துவிட்டார்.
முதலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி என சொல்லும் போதே அவர் குறித்த கேள்வி எல்லாம் வேண்டாம் என்பது போல் தலையை செய்கை காட்டினார். பிறகு அந்த நிருபர் கேட்டதும், இப்ப என்ன பண்ணிகிட்டு இருக்கோம். நான் என்ன ஊர் சுத்தி பார்க்கவா வந்திருக்கேன். இது வரலாறு காணாத மழை என்கிறார்கள். பெருமழை, இயற்கை பேரிடர், எங்களால் முடிந்த அளவுக்கு நாங்கள் பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். படகுகள் மூலம் மீட்பு பணிகள் நடத்தப்பட்டுத்தான் வருகிறது. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் என எல்லோரும் வேலை செய்கிறார்கள் என்றார். இந்த நிலையில் நாளை காலை தூத்துக்குடிக்கு முதல்வர் ஸ்டாலின் செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது.