பொன்முடி தீர்ப்பு மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது – அடித்து சொல்லும் அண்ணாமலை…!!
தமிழ்நாடு
1996-2001-ம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார் பொன்முடி. அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ1.36 கோடி பொன்முடி சொத்து குவித்தார் என 2011-ல் தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபணமானதால் பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த தீர்ப்பினை வரவேற்பதாக கூறியுள்ளார். தாமதமான தீர்ப்பு என்றாலும் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது என்று கூறினார் அண்ணாமலை. தமிழகத்திலே ஊழல் இல்லாத ஆட்சி அமைவதற்கு இது படிக்கல்லாக அமையும். திமுகவிற்கு இந்த தீர்ப்பு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது. சீனியர் அமைச்சர் பொன்முடிக்கு கிடைத்த தண்டனை அவரோடு மட்டும் நின்று விடாது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். திமுக ஊழல் கட்சி என்பது உறுதியாகியுள்ளது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.