சினிமா
Trending

‘தளபதி 68’ இல் இணைந்த கஞ்சா கருப்பு – அப்போ காமெடிக்கு பஞ்சமே இருக்காது…!!

நாடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.

அப்பா, மகனாக விஜய் இரட்டை கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் விஜய்யை மிகவும் இளமையாக காண்பிக்க மிகுந்த பொருட் செலவில் டிஏஜிங் முறையை பயன்படுத்தி வருகின்றனர் படக்குழுவினர்.

இந்நிலையில் ‘தளபதி 68’ படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிவகாசி, அழகிய தமிழ் மகன் படங்களில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த நிலையில் தற்போது 16 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் கஞ்சா கருப்பு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்து வரும் நிலையில் தற்போது கஞ்சா கருப்பும் இணைந்துள்ளதால் ‘தளபதி 68’ படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இப்படத்திற்கு ‘பாஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல்கள் உலா வந்தன. ஆனால அதனை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மறுத்துள்ளார்.

இதனையடுத்து நியூ இயரை முன்னிட்டு ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் மற்றும் புதிய போஸ்டர் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜெயராம், பிரபுதேவா, மைக் மோகன், பிரசாந்த், அஜ்மல், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட நடிகைகளும் ‘தளபதி 68’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button