பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் நடித்துள்ள சலார் திரைப்படம் கடந்த வாரம் 22ம் திகதி வெளியானது. பான் இந்தியா படமாக தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இந்த படம் வெளியானது. முதல் நாளில் தரமான ஓபனிங் கிடைத்ததால், 178 கோடி ரூபாய் வசூலித்து இந்தாண்டின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் சாதனையில் மாஸ் காட்டியது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் 117 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆகமொத்தம் முதல் இரண்டு நாட்களில் 295 கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையை படைத்தது. ஷாருக்கானின் பதான், ஜவான், விஜய்யின் லியோ படங்கள் தான் 2023ல் முதல் மூன்று நாட்களில் அதிகம் வசூலித்த படங்கள் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறி வந்தன. அது தற்போது சலார் படத்தால் அந்த சாதனை பிரேக் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மூன்றாவது நாளான நேற்றும், சலார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், சலார் படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதியுள்ளது. இதன் காரணமாகவே நேற்றும் 100 கோடி ரூபாய்க்கு அதிகமாக கலெக்ஷன் செய்துள்ளது. அதன்படி முதல் மூன்று நாட்களில் சலார் வசூல் 400 கோடி ரூபாயை கடந்துள்ளது.
இதனால் பிரபாஸ் உட்பட சலார் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. அதேநேரம் இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. மேலும் கேஜிஎஃப் படங்களை விட சுமார் என்றே ரசிகர்கள் கூறியுள்ளனர். இன்று கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் சலார் வசூல் நாளை வரை உச்சம் தொடும் என சொல்லப்படுகிறது. அதேபோல், 10 நாட்களுக்குள் 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.