உலகம்
Trending

எந்த வேலையும் செய்யாமலே ஆண்டுக்கு ரூ 8,300 கோடி சம்பாதிக்கும் நபர்…!!

பணம் சம்பாதிக்கவும் எதிர்காலம் கருதியும் பலர் இரவு பகல் பாராமல் உழைக்கும் நிலையில், எந்த வேலையும் செய்யாமலே பிறக்கும் புத்தாண்டு முதல் ஒருவர் ஆண்டுக்கு ரூ 8,300 கோடி சம்பாதிக்க இருக்கிறார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான Steve Ballmer என்பவரே, எந்த வேலையும் செய்யாமல் ஆண்டுக்கு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் சம்பாதிக்க இருக்கிறார்.

67 வயதான Steve Ballmer ஏற்கனவே உலகின் தனி நபர் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் பில்லியனர்கள் பட்டியலில் Steve Ballmer தற்போது 10வது இடத்தில் இருக்கிறார்.

இவரது மொத்த சொத்து மதிப்பு என்பது 111.7 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவன வரலாற்றில், இவர் 30வது ஊழியர் என்றே கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இவருக்கு 4 சதவிகித பங்கிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது 333.2 மில்லியன் பங்குகள் அந்த நிறுவனத்தில் இவருக்கு சொந்தமாக உள்ளது. இதனால் ஆண்டுக்கு சுமார் 930 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை Steve Ballmer ஈவுத்தொகையாக பெற்று வருகிறார்.

இதுவரையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களின் ஒரு பங்கிற்கு ஈவுத்தொகையாக 2.79 டொலர் அளித்து வந்தது. இதனால் ஆண்டுக்கு சுமார் 930 மில்லியன் டொலர் தொகையை Steve Ballmer ஈவுத்தொகையாக பெற்று வந்தார்.

ஆனால் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் ஈவுத்தொகையை 3 டொலராக அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் பின்னர் அவர் ஆண்டுக்கு ரூ 8,300 கோடி ஈவுத்தொகையாக பெற இருக்கிறார்.

1980ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 30வது ஊழியராக Steve Ballmer இணைந்துள்ளார். 2000ம் ஆண்டில் பில் கேட்ஸை அடுத்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார்.

நீண்ட 14 ஆண்டுகள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை முன்னெடுத்து நடத்திய Steve Ballmer, 2014ல் அந்த பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் இந்தியரான சத்யா நாதெல்லா அந்த பொறுப்புக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button