இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் இறக்குமதி அரசிக்கு 64 ரூபா வரி அறிவிடப்படவுள்ளது.
இதற்கு முன்னர் ஒரு கிலோ கிராம் இறக்குமதி அரிசிக்கு 65 ரூபாய் வரி அறிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில், நிதியமைச்சு அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
குறித்த தீர்மானம் ஜனவரி 2ஆம் திகதி முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.