இந்தியா
Trending

இந்த நிமிடம் வரை பாஜக தலைவர்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் – பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ்…!!

இந்தியா: தமிழ்நாடு

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதைத் தொடர்ந்து, பாஜகவுக்கு எதிரான அதிரடி நிலைப்பாட்டை எடுத்தார். பாஜக உடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார் எடப்பாடி. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல, 2026 சட்டசபை தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என அதிமுக தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

அதேசமயம் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுடன் கூடுதலாக நெருக்கம் காட்டி வருகிறார். பாஜகவிற்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருகிறார். மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார் எனக் கூறி வருகிறார். இந்தநிலையில் திருச்சியில் புதிய விமான முனையம் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் வருகை தந்தார். அப்போது விமான நிலையத்திலேயே ஓ.பன்னீர்செல்வம் பூங்கொத்து கொடுத்து பிரதமர் மோடியை வரவேற்றார்.

இந்நிலையில், சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த பதிலளித்த அவர் கூறியதாவது..

திருச்சி வந்த பிரதமரை சந்திப்பதற்கு வாய்ப்புக் கேட்டிருந்தேன். பிரதமரை வரவேற்கவும், வழியனுப்பவும் அனுமதி கொடுத்தனர். மனநிறைவோடு அதை நானும் செய்தேன். இந்தச் சந்திப்பில், அரசியல் எதுவும் இல்லை. அவர் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்கான வாழ்த்துக் கடிதத்தைக் கொடுத்தேன். வாய்ப்புகள் வரும்போது உறுதியாக டெல்லிக்குச் செல்வேன். இந்த நிமிடம் வரை அகில இந்திய அளவில் பாஜகவினர் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். மக்களவைத் தேர்தல் என்பது இந்திய பிரதமரை தேர்வு செய்கிற தேர்தல். அந்த தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் நிச்சயமாக வெற்றி பெறும். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வருவார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்று தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button