கொட்டும் மழையில் நனைந்து கொண்டே பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – நெகிழ்ந்த மக்கள்…!!!
இந்தியா: தமிழ்நாடு
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு பரிசு தொகுப்பு வழங்கப்படும். பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். கடந்தாண்டு இந்த பொங்கல் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது. அதன்படி இந்தாண்டிற்கான பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
அதன்படி 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்ய அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதற்கிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பிலும் மக்களுக்கு பொங்கள் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியில் ஆயிரம் பேருக்கு அரிசி, வெல்லம், புத்தாடைகள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கினார்.
பரிசுத்தொகை வழங்கி கொண்டு இருந்த போதே மழை பெய்ய தொடங்கியது. எனினும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நனைந்தபடியே பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கினார். மழையில் நனைந்தபடியே உதயநிதி ஸ்டாலின் பொங்கல் பரிசுத்தொகுப்பை தனது கைகளாலே அனைவருக்கும் கொடுத்தார். இது அங்குள்ள மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.