இந்தியா: தமிழ்நாடு
தொண்டர்களின் துணையோடு அதிமுகவை மீட்டெடுப்போம் என தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்ட அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் தருமபுரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் ஜி. அரங்கநாதன் தலைமை வகித்தார். இந்நிலையில் இந்த கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது…
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கும் போது கட்சியின் சட்ட விதிகளை உருவாக்கினார். அதனை மாற்றி, தற்போது அதிமுகவைக் கைப்பற்றி இருக்கின்றனர்.
தொண்டர்கள் சேர்ந்துதான் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்ய வேண்டும். அந்த சட்ட விதியையே மாற்றி விட்டனர். அதிமுக தொண்டர்களின் கட்சியாக இருந்தது. தற்போது செல்வந்தர்கள் கட்சியாக மாற்றிவிட்டனர். தொண்டர்கள் துணையோடு அதிமுகவை மீட்டெடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.