உலகம்
Trending

அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் இருந்து விலகிய விவேக் ராமசாமி – டிரம்பிற்கு ஆதரவு!

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில், எதிர்வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

தற்போதைய அதிபரான ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

இவ்வாறான நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். மேலும், தான் அதிபராக வந்தால் பல மாற்றங்களை கொண்டுவருவதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதால், தான் விலகுவதாகவும், அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாகவும் விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button