உலகம்
Trending

குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் பாரிய வீழ்ச்சி – செய்வதறியாது தவிக்கும் சீனா…!!

உலக மக்கள் தொகையில் முன்னணியில் இருந்துவந்த சீனா, கோவிட் தாக்கத்திற்கு பிறகு மக்கள் தொகையில் கடுமையான சரிவை சந்தித்தது. கோவிட் தொற்றால் லட்சக்கணக்கான மக்களை இழந்த சீனா, மக்கள் தொகையை பெருக்க பல்வேறு உத்திகளை கையாண்டது.

அந்தவகையில் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் திட்டத்தை தளர்த்தி, தற்போது மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் அனுமதி அளித்தாலும், பிறப்பு விகிதம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை.

அதேசமயம் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2022ல் சீனாவில் மக்கள் தொகை சரிவை சந்தித்தது. வருடாவருடம் அதிகரிக்கும் மக்கள்தொகை, சுமார் 20 லட்சம் அளவிற்கு ஒரே ஆண்டில் குறைந்தது.

2023லும் இந்த சரிவு தொடர்ந்ததால் சீன அரசு அதிர்ச்சியடைந்துள்ளது. தற்போதைய சீன மக்கள் தொகை 140.9 கோடி என அந்நாட்டின் தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. இப்படியே பிறப்பு விகிதம் குறைந்துவந்தால், எதிர்காலத்தில் சீனாவில் வயதானவர்களே அதிகளவு இருப்பார்கள் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது அந்நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு பாதகமாக அமையலாம். இந்நிலையில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button