முதல் மனைவியை விவாகரத்து செய்ய இதுதான் காரணம் – பல ஆண்டு ரகசியத்தை உடைத்த சரத்குமார்….!!
தமிழ் சினிமாவில் வில்லன், கதாநாயகன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சரத்குமார் தற்போது குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சரத்குமார், விஜய்க்கு அப்பா வாரிசு படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களை வைத்துக்கொண்டு மிரட்டி வருகிறார்.
அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர் என பன் முகங்களை கொண்ட, சரத்குமார், 1984 ஆம் ஆண்டு சாயாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார். இவருக்கு வரலட்சுமி மட்டுமில்லாமல் பூஜா என்ற இன்னொரு மகளும் சரத்குமாருக்கு இருக்கிறார். இவர்கள் இருவரின் திருமண வாழ்க்கையும் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது.
பின் இடையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமா இருவரும் பிரிந்து விட்டனர். இதையடுத்து, நடிகை ராதிகாவை 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். படங்களில் படு பிஸியான நடிகராக இருக்கும் சரத்குமார், தனது முதல் மனைவி சாயா குறித்து மனம் திறந்து பல விஷயத்தை பேசி உள்ளார்.
இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்,உண்மையில் கடவுள் எங்கள் குடும்பத்தின் மீது கருணையாக இருக்கிறார். வரலட்சுமி அம்மாவை நான் விவாகரத்து செய்த போதும் அவர் எங்களுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். அதே போல என் மகள் வரலட்சுமியை, நீ உன் அப்பாவிடம் பேசக்கூடாது, அவர் வீட்டுக்குபோகக்கூடாது என்றெல்லாம் அவர் கட்டுப்படுத்தவில்லை. நாங்கள் இருவரும் பிரிவதற்கு சில காரணங்களால் எங்கள் இருக்கிறது. பாதைகளை நாங்கள் தனித்தனியாக தேர்ந்தெடுத்துக் கொண்டோம். மற்றபடி எங்கள் இருவருக்குள்ளும் எந்தவிதமான கால் புணர்ச்சியும் இல்லை. இப்போதும் நாங்கள் நண்பர்களாக பயணிக்கிறோம்.
அனைவரையும் ஒன்றாக இருப்பதை பார்ப்பதற்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆரம்பத்தில் வரலட்சுமியும், ராதிகாவும் பழகும் போது சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தது உண்மை தான். ஆனால், காலம் செல்ல செல்ல அதுவும் மாறிவிட்டது என்றார். மேலும், தனது மகள் வரலட்சுமி குறித்து பேசி சரத்குமார், என் மகளை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். தெலுங்கு சினிமாவில் வரலட்சுமி மிரட்டி வருகிறாள். கதை எழுதும் போதே இந்த கேரக்டர் வரலட்சுமிக்குத்தான் என முடிவு செய்துவிடுகிறார்கள் என்றார்.