சீனாவின் ஜியாங்க்ஷி மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பலியானதாக உள்ளூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜியாங்ஷி மாகாணத்தின் Yusui மாவட்டத்தில் அமைந்துள்ள வர்த்தக பகுதியின் அடித்தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த 120 மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், காவல்துறை மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அதற்குள் தீவிபத்தில் சிக்கியவர்களில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை உள்ளூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் காயமடைந்தவர்கள் குறித்த விபரம் உடனடியாக தெரிய வரவில்லை. முன்னதாக, கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு ஹெனான் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.