பாடசாலையில் இடம்பெற்ற பாரிய மோசடி அம்பலம்
பாடசாலையில் இடம்பெற்ற பாரிய மோசடி அம்பலம்
கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் மேசை கதிரை மோசடி தொடர்பில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் குழுவுடன் சில நாட்களாக இது குறித்து ஆராயப்பட்டது.
இதன்போது ஒரு நாள் இரவு 10.30 மணியளவில் பிரதான மின் விளக்குகளை அணைத்த நிலையில், பாடசாலையின் பின்புற வாயில் வழியாக லொறி ஒன்று திருட்டு தனமாக நுழைந்தது.
சிறிது நேரம் கழித்து, குறித்த லொறி விளக்குகளை அணைத்த நிலையில், மீண்டும் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியே வந்தது.
அப்போது அங்கிருந்த சிலர் லொறியை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது லொறிக்குள் பாடசாலைக்கு சொந்தமான மேசை, நாற்காலிகள் இருப்பது தெரியவந்தது.
லொறியை ஓட்டிச் சென்றவர், பாடசாலைக்கு அருகில் உள்ள பழைய இரும்புக் கடையின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டு, அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பாடசாலையில் உள்ள உயர் அதிகாரிகளும் இந்த மோசடியுடன் தொடர்புப்பட்டிருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.
இது போன்ற சட்டவிரோத செயல்களை நாட்டின் முன் அம்பலப்படுத்த விழிப்புடன் உள்ளது.