Homeஇலங்கை

ஜனாதிபதி பதவிக் காலம் தொடர்பான மனு இன்று பரிசீலனை

ஜனாதிபதி பதவிக் காலம் தொடர்பான மனு இன்று பரிசீலனை

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பாக உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனு இன்று (08) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த மனு ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு வருகிறது.

இந்த மனுவை பரிசீலிப்பதற்காக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ்.துரைராஜா ஆகிய ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு அண்மையில் பெயரிடப்பட்டது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் திகதிகள் தொடர்பில் உயர் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை தற்போது திட்டமிடப்பட்டுள்ளவாறு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர், சி.டி.லெனவவினால் கடந்த புதன்கிழமை இந்த மனுவை தாக்கல் செய்யப்பட்டது.

இதேவேளை, தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால் சட்டத்தின் முன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button