இன்று (22) முதல் ஒரு முட்டை 42 ரூபாய்க்கு சந்தைக்கு விநியோகிக்கப்படும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் முட்டையின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் மீண்டும் முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து வர்த்தக அமைச்சர் திரு.நளீன் பெர்னாண்டோவிடம் அத தெரண வினவிய போது, இலங்கைக்கு மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான தீர்மானம் இன்று அறிவிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.