Homeஉலகம்

பெண்களை துஸ்பிரயோகம் செய்தவர்கள் மோசடிக்காரர்கள்

பெண்களை துஸ்பிரயோகம் செய்தவர்கள் மோசடிக்காரர்கள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்  ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் குற்றவியல் வழக்கறிஞராக அவரது கடந்த கால செயற்பாடுகளை நினைவுபடுத்தியுள்ளதுடன் டிரம்ப் எதிர்கொண்டுள்ள நீதிமன்ற வழக்குகளையும் நினைவுபடுத்தியுள்ளார்.

ஜோபைடன் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து வெளியேறிய பின்னர் ஆற்றியுள்ள முதலாவது உரையில்  கமலா ஹரிஸ் இதனை  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஏற்ற விதத்தில் ஜனநாயக கட்சியினரின் பரந்துபட்ட ஆதரவு தனக்கு கிடைத்துள்ளமை குறித்து அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

குற்றவியல் வழக்கறிஞராக தனது கடந்தகாலத்தையை நடவடிக்கைகளை  டிரம்பிற்கு எதிராக பயன்படுத்த தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

தனது பிரச்சார உத்தி வழக்கறிஞர் எதிர் குற்றவாளி என்ற அடிப்படையில் காணப்படலாம் என்பதை அவர் கோடிட்டுக்காட்டியுள்ளார்.

நான் எல்லாவகையான குற்றவாளிகளையு;எதிர்கொண்டேன் அவர்களிற்கு எதிராக செயற்பட்டேன்- பெண்களிற்கு எதிரான குற்றங்களி;ல் ஈடுபட்டவர்கள்,பெண்களை துஸ்பிரயோகம் செய்தவர்கள்,நுகர்வோருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மோசடிக்காரர்கள்,தங்கள் நன்மைகளிற்காக விதிமுறைகளை மீறிய ஏமாற்றுக்காரர்கள் என கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

டிரம்பிற்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டுகள் காணப்படுவதையே அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப்போன்றவர்களை எனக்கு தெரியும் அவர்களை எவ்வாறு கையாள்வது என்பது எனக்கு தெரியும் என  கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button