Shanu
Matale
டிசம்பர் 21-ம் திகதி உலக தியான தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட மனநலனுக்கு தியானம் மிகச் சிறந்த கருவி என்றும், தியானம் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்ல வேண்டும் என்றும் ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற முதல் உலக தியான தினத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
மனநலனுக்கு தியானம் மிகச் சிறந்த கருவி. பல் சுகாதாரம் (Dental Health) இருப்பது போல் மனதுக்கான சுகாதாரமும் (Mental Health) உள்ளது. தியானத்தில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியை உணர்கிறார்கள். அவர்கள் உலகத்தை மகிழ்ச்சியாக வைக்கிறார்கள். மன ரீதியிலான பிரச்சினை என்பது உலக மக்கள் தொகையில் மிகப் பெரிய எண்ணிக்கையில் இருக்கிறது. ஒருபுறம் தீவிர பதட்டம் மறுபுறம் தீவிர மனச்சோர்வு என மனநல நெருக்கடி நம் மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. ஒருபுறம், நமது இளைஞர்கள் ஆக்ரோஷமான நடத்தைக்கு உள்ளாகிறார்கள். மறுபுறம், மனச்சோர்வுடன் உள்ளார்கள்
சுற்றுச்சூழல் மேம்படும், தொடர்புகள் மேம்படும் இன்னும் பல நூறு நன்மைகள் கிடைக்கும். எல்லையில் நிற்கும் ராணுவ வீரராக இருந்தாலும், வீடுகளில் நடக்கும் குடும்ப வன்முறையாக இருந்தாலும் அனைத்து இடங்களிலும் சூழல் மேம்படும். சமரச தீர்வுக்கான மேஜை அருகே அமர்பவர்கள், முதலில் தியானத்தில் ஈடுபட்டால் மிகப் பெரிய நன்மைகள் விளையும்.
உடல் சார்ந்த பிரச்சினைகள் காரணமாக சிலரால் யோகா செய்ய முடியாமல் போகலாம். ஆனால், தியானம் எங்கேயும் எப்போதும் எல்லோராலும் மேற்கொள்ள முடியும். மன ரீதியாக கட்டுப்பாடுகளை வைத்திருப்பவர்களுக்கு சர்வதேச தியான தினம் மிகப் பெரிய கதவை திறந்து வைக்கிறது. தியானத்துக்கு நாடு, இனம், வயது என எந்த எல்லையும் இல்லை. அனைத்து எல்லைகளையும் கடந்து செல்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. எனவே, தியானம் பல வழிகளில் மிக மிக பயனுள்ளது. தியானம் செய்வது கடினம் என பொதுவான கருத்து இருக்கிறது. ஆனால், தியானம் மிக எளிதானது. அது நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. முயற்சி இல்லாமல் செய்யக்கூடியது. மனபதற்றம், பயம், தனிமை உணர்வு போன்றவற்றில் இருந்து நம்மை விடுவிக்கிறது” என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குறிப்பிட்டார்.