Homeஇந்தியாஉலகம்

நாளை சபரிமலை  மகரஜோதியில்  பக்தர்களுக்கான புதிய கட்டுப்பாடு

நாளை சபரிமலை  மகரஜோதியில்  பக்தர்களுக்கான புதிய கட்டுப்பாடு

Shanu

Matale

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி நாளை(14-ந்தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படும். இதனையொட்டி ஐயப்பனுக்கு  அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருந்து நேற்று புறப்பட்டது.

அது பல இடங்களை கடந்து பெருவழிப்பாதை வழியாக வந்து பம்பை கணபதி கோவிலுக்கு நாளை பிற்பகல் வந்து சேரும் மாலையில் அங்கிருந்து புறப்படும் திருவாபரண ஊர்வலம், 6 மணிக்கு மேல் சன்னிதானத்தை வந்தடைகிறது. பின்பு ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு  தீபராதனை நடைபெறும்

அதன் தொடர்ச்சியாக மாலை 6.30 மணிக்கு மேல் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. மகரஜோதியை காண கடந்த சில நாட்களாகவே பக்தர்கள் சபரிமலைக்கு வரத் தொடங்கினர்.

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருவாபரணங்கள் ஊர்வலம் பம்பையில் இருந்து பிற்பகல் செல்லும்  என்பதால் நாளை காலை 10 மணிக்கு மேல் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள.

திருவாபரண ஊர்வலம் சரங்குத்தியை அடைந்த பிறகே பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றும், நாளையும் மெய்நிகர் வரிசை மற்றும் நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் செய்த பக்தர்கள் மட்டுமே பம்பைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

அது மட்டுமின்றி நாளை மாலை பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்ய வேண்டிய இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிலக்கல்லில் அட்டத்தோடு, அட்டத்தோடு மேற்கு காலனி, இலவுங்கல், நெல்லிமலை, அய்யன்மலை, பம்பையில் மலை உச்சி, மலைஉச்சியின் நடுப்பகுதி, பெரியானை வட்டம், சன்னிதானம் பாண்டிதாவளம்,

தரிசன காம்ப்ளக்ஸ், அன்னதான மண்டப முன்பகுதி, திருமுற்றத்தின் தெற்கு பகுதி, ஆழி பகுதி, கொப்பரைகலம், ஜோதி நகர், வனத்துறை அலவலகம் முன்பு, குடிநீர் அலுவலகம் ஆகிய இடங்களில் இருந்து மகரஜோதியை தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மகரவிளக்கு பூஜை முடிந்து வருகிற 20-ந்தேதி காலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது எனவும் பக்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button