Homeஇலங்கைஉலகம்

ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி

ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி

Shanu

Matale

“அறுவடைத் திருநாள்” என்று பொருள்படும் தைப்பொங்கல், உலகம்முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடன்கொண்டாடப்படுகிறது. நிறைவான அறுவடைக்கு பங்களித்த சூரியன், பூமி, மழை மற்றும் பசுக்கள், உபகரணங்களுக்கு நன்றி செலுத்துவதுஇந்த நாளின் சிறப்பம்சமாகும். இந்த விழா ‘தை’மாதத்தின் முதல் நாளில்கொண்டாடப்படுகிறது. சூரியனின் வடக்கு நோக்கிச்  செல்லும்’உத்தராயணம்’, தைப் பொங்கல் நாளில் தொடங்குகிறது. புதிய திசையைநோக்கிச் செல்லல், மனித சமூகத்தின் உள்ளக-வெளிப்புற சகவாழ்வுஎன்பனவே தைப்பொங்கல் பண்டிகையின் அர்த்தமாகும்.

இந்த நாட்டு மக்களின் நற்பண்புகள்,நல்லிணக்கம் மற்றும்  சகவாழ்வுஎன்பவற்றை மேம்படுத்தி சமூக மாற்றத்திற்கான ஆரம்ப முயற்சியாகவும், சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறைக்கான புதிய  ஒரு  திசையின் தொடக்கமாக ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளசமயத்தில், தைப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதுமகிழ்ச்சியளிக்கிறது. வரலாற்று ரீதியாக வேரூன்றிய ஆசிய மரபுகளில்மனிதனுக்கும்  சுற்றுச்சூழலுக்கும் இடையிலான பிணைப்பு பிரிக்கமுடியாதது. தைப்பொங்கல் தினத்தால் வெளிப்படுத்தப்படும் அந்த மரபுகள்இந்த திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், தைப்பொங்கல் கொண்டாட்டம் மக்களின் கலாச்சாரவாழ்வில் புதிய நம்பிக்கைகளை கட்டியெழுப்புகிறது. நாட்டில்உருவாகியுள்ள புதிய  உத்வேகத்துடன், இலங்கையர்களாகிய நம்அனைவருக்கும், “அழகான வாழ்க்கை” என்ற நம்பிக்கையை நம்இதயங்களில் சுமந்து, புத்தாண்டில் புதிய உற்சாகத்துடன் முன்னோக்கிக்கொண்டு செல்லும்  வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்காக சுற்றுச்சூழல்   முன்னேற்றத்திற்கு உகந்த முன்னுரிமை அளிக்கும் ஒரு புதிய கலாசாரநெறிமுறை  இருப்பை உருவாக்குவதன் மூலம் நிலையான அமைதி, நல்லிணக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்குத் தேவையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தலைமை பொறுப்பு மற்றும்பொறுப்புக்கூறலை நாங்கள் ஏற்கிறோம்.

நாட்டிற்கும்   மக்களுக்கும் பல நல்ல விடயங்களை நிறைவேற்றஉறுதிபூண்டு, நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாங்கள், அந்தவாக்குறுதிகளை தடைகளுக்கு மத்தியிலும் பின்வாங்காததுணிச்சலுடனும் அசைக்க முடியாத உறுதியுடனும் நிறைவேற்றஉறுதிபூண்டுள்ளோம். இந்த நாட்டு மக்களின் முகங்களில் நீடித்தபுன்னகையைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட இந்தசெயற்பாட்டில், புதிய அணுகுமுறைகளுடன், ஒற்றுமையுடனும்பங்கேற்புடனும் ஒன்றிணைய உங்கள் அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறேன். சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம்பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

இலங்கை மற்றும் உலகளாவிய இந்து பக்தர்கள் அனைவருக்கும்நல்லிணக்கம் மற்றும் நன்றியுணர்வு நிறைந்த, வளமான மற்றும்மகிழ்ச்சியான தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
2025 ஜனவரி 14 ஆம் திகதி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button